ஒன்ராறியோவின் இரண்டாவது கட்ட கொரோனா தடுப்பூசி விநியோக திட்டத்தில் உணவக பணியாளர்கள் உள்ளடக்கப்படாதமை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்ட கொரோனா தடுப்பு மருந்து விநியோகத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களின் விரிவான பட்டியலை ஒன்ராறியோ அரசாங்கம் வெளியிட்டிருந்தது.
அதில், உணவக மற்று பான தொழில்துறை பணியாளர்கள் இடம்பெறவில்லை.
தொற்றுநோய் ஆபத்துகள் உள்ள நிலையில், உணவகத் தொழிலுக்கு அரசாங்கம் ஏன் முன்னுரிமை அளிக்கவில்லை என்று துறைசார் பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொற்று ஆபத்துள்ள தமக்கு முன்னுரிமை அளிக்கப்படாதமை குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புமாறு உணவக உரிமையாளர்களிடம் பணியாளர்கள் கோரி வருகின்றனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.