யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உள்ளிட்ட 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, காரைநகர் வடபிராந்திய போக்குவரத்து சபை சாலையில் பணியாற்றும் திருத்துனர் ஒருவருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மல்லாவி மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடைய, இருவருக்கும், கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவரும், கிளிநொச்சி, புத்தளம் மற்றும் மாத்தறையைச் சேர்ந்தவர்கள் என்றும், மருத்துவர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.