ஒன்ராரியோவில் இரண்டாவது நாளாகவும் ஆயிரத்து 500இற்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 553பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்தோடு 15 மரணங்களும் சம்பவித்துள்ளன.
இதேவேளை ஒன்ராரியோவில் கடந்த ஏழு நாட்களில் சராசரியாக ஆயிரத்து 427 தொற்றாளர்கள் நாள் தோறும் உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகளும் அதிகரிகரித்து வருவதாகவும் பொதுசுகாதார வைத்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.