கட்சியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிமுக. வை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
பெருந்துறை தொகுதியில் 2011 மற்றும் 2016 தேர்தல்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் அங்கம் வகித்தவரும், அமைச்சர் பதவிகளை வகித்தவருமான தோப்பு வெங்கடாசலம். அதிமுகவினால் அறிவிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் என்ற வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன், சேந்தமங்கலம் தொகுதி உறுப்பினர் சந்திரசேகரனுக்கும், இந்த முறை போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் அதிமுக வேட்பாளர், சந்திரனுக்கு எதிராக இன்று சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து சந்திரசேகரனை அதிமுக. வில் இருந்து நீக்குவதாக பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.





