ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு, கேரள உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவிபெறும் பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கேரளாவை சேர்ந்த ஒருவர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது ‘அரசு உதவி பெறும் பாடசாலை ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதித்த கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்ததுடன், மனு தொடர்பாக கேரள அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.