அனைத்து குழந்தைகளுக்கும் இனவெறி மற்றும் கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன சமூகங்களின் பங்களிப்புகள் குறித்து கற்பிக்கப்படும் என்று வேல்ஸின் கல்வி அமைச்சர் கிர்ஸ்டி வில்லியம்ஸ் (Kirsty Williams) தெரிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்டத்தில் மாற்றங்களின் கீழ் கறுப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன வரலாறுகளை கற்பிப்பது கட்டாயமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இது மாணவர்களை உலகின் தகவலறிந்த குடிமக்கள் ஆக உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடந்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்பட்ட பாடசாலை பாடத்திட்ட சட்டத்தில் மாற்றங்கள் சேர்க்கப்படவில்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.