சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக கூடுதல் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணபலம், ஆள்பலத்தால் சாட்சிகளை அச்சுறுத்தி கலைக்க வாய்ப்புள்ளதால் வழக்கின் விசாரணையை முடிக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, காவல்துறையினரின் விசாரணையின் போது மரணமடைந்த ஜெயராஜின் மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவருடை மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்கள் மீது காவல்துறையினரின் மேற்கொண்ட தாக்குதலில் இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்களின் உயிரிழப்புக்கு காரணமான 10 காவல்துறையினரின் கைது செய்யப்பட்டு, மத்திய குற்றப்புலனாய்வுத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டனர்.