பிரபல தகவல் பரிமாற்ற செயலியான புலனம், மற்றும் படவரி, முகநூல், பற்றியம் போன்ற சமூக ஊடகங்கள் இன்று உலகின் பல பகுதிகளில் முடங்கியதாக கூறப்படுகிறது.
இதனால், இவற்றின் பயனாளர்கள் தகவல்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
43 நிமிட முடக்கத்திற்கு பின்னர் புலனம், சேவை சீரடைந்தை அடுத்து, இதன் பயனாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அத்துடன், படவரி, முகநூல், பற்றியம் போன்ற சமூக வலைதளங்களும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளன.
புலனம் செயலி முடக்கம் குறித்து அமெரிக்காவில் இயங்கி வரும் நிறுவனம் சார்பில் இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதையும் தெரிவிக்கப்பட வில்லை.