உருமாற்றமடைந்த கொரோனா வைரஸின் பரவல் நிலைமைகள் கனடாவில் அதிகரித்துள்ளதாக பொதுசுகாதார தலைம வைத்திய அதிகாரி தெரேசா டாம் (Theresa Tam) அறிவித்துள்ளார்.
இதனால் கனடாவில் தொற்று நோய் பரவல் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமைகள் அதிகரித்துள்ளதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
உருமாற்றம் அடைந்த வைரஸ் தொற்றுக்களை நாம் கட்டுப்படுத்தாது விட்டால் நிலைமைகள் பாரதூரமாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைய நாட்களில் உருமாற்றம் அடைந்த வைரஸ் தொற்றுள்ளவர்கள் பரவலாக அடையாளம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.