தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ஆம் திகதி நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் திகதி ஆரம்பமாகி இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக கரூரில் 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்றும், அவர்களில் 59 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 25 பேரும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி நாயக்கனூர் தொகுதியில் 33 பேரும், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 41 பேரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியில் கோவை தெற்கில் 19 பேரும், அமமுக தலைவர் தினகரன் போட்டியிடும் கோவில்பட்டியில் 19 பேரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் 24 பேர் போட்டியிடுகின்றனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 22ம் திகதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.