சேவை யாப்பினை மீறி அதிபர் சேவைக்கும் கல்வி நிர்வாக சேவைக்கும் ஆட்சேர்க்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வி பாதுகாப்பு தொழிற்சங்க ஒன்றியத்தால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று பிற்பகல் பத்தரமுல்லை – இசுருபாயவிற்கு அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் வேறொரு ஆசிரியர் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் அந்த இடத்திற்கு பிரவேசித்ததால் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.