பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் கீச்சகப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் அண்மையில் சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியைச் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.