மாகாண சபைக்கான அதிகாரங்களை முழுமையாக நீக்கிய புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரே மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தலை காணி, காவல்துறை அதிகாரங்களுடன் மாகாணசபை தேர்தலை நடத்துவதென்றால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமா அல்லது கைவிடப்பட வேண்டிய ஒன்றா என்பது குறித்து முதலில் ஆழமாக ஆராய்ந்து, சகல தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அதன் பின்னர் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணசபை தேர்தலை நடத்தியாக வேண்டும் என தமிழ் அரசியல் தலைமைகள் வலியுறுத்தியுள்ள நிலையிலும்,தேர்தலை நடத்துவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்துள்ள நிலையிலும் மாகாணசபை தேர்தல் குறித்து அரசாங்கத்திற்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்ற மை குறிப்பிடத்தக்கது.