பசறை பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று மலைப்பாதையில் இருந்து விலகி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொனராகல – பதுளை வீதியில் 13ஆவது மைல் கல் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் எட்டுப் பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் 31 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.