நாட்டுப்பாற்றாளர் தியாகி அன்னை பூபதியின் 33ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பூபதி அம்மையாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அத்துடன் நெருக்கடியான இக்கால கட்டத்தில் சொற்ப அளவிலான கட்சியின் உறுப்பினர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
எனினும், இந்த நிகழ்வு .இடம்பெற்ற தருணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தினை அண்மித்த வீதிகளில் சிவில் உடைகளைத் தரித்த புதுமுகங்களின் பிரசன்னம் அதிகமாக காணப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.