சிறிலங்காவில் நேற்று தினம் 298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றையதினம் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது.





