இனவெறி என்பது தமது தேசத்தை நீண்டகாலமாக பாதித்த ஒரு அசிங்கமான விஷம் என்றும், அதனை முறியடிக்க அமெரிக்கர்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் எனவும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அட்லாண்டாவில் ஆசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு சென்று பார்வையிட்ட பின்னரே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு குற்றங்கள் கொரோனா தொற்று நோய்களின் போது அதிகரித்துள்ளன.
இனவெறி சம்பவங்களை காணும் போது அமெரிக்க மக்கள் அதற்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும்.
இனவெறிக்கு நமது அமைதி உடந்தையாக இருக்கிறது. நாம் உடந்தையாக இருக்க முடியாது.
ஆசிய அமெரிக்கர்கள் அச்சத்தின் கதைகளைக் கேட்பது இதயத்தை நொருக்குவதாக உள்ளது’’ என்றும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.