அமெரிக்க மற்றும் கனடிய விமானப்படைகள் இணைந்து ஒரு வார கால வான்காப்பு கூட்டுப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன.
கிறின்லாந்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் ஆர்ட்டிக் வான் பாதுகாப்பு ஒத்திகை என்ற பெயரில் இந்த கூட்டுப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் 26ஆம் நாள் வரை இந்தக் கூட்டுப் பயிற்சிகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.