கொரோனா தடுப்பூசி எதிர்வரும் வாரங்களில் நல்ல பலனைத் தரவுள்ளதாக பொதுசுகாதாரத்துறையின் தலைமை அதிகாரி வைத்தியர் தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள 75வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் விரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருசிலருக்கு மட்டுமே சில பக்கவிளைவுகள் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.