ஜப்பானில் உள்ளூர் நேரப்படி மாலை, 6:10 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மியாகி (Miyagi) மாகாண கடல் பகுதியை மையமாக வைத்தே இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் இது 7.0 ஆக பதிவாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், பல இடங்களில், கட்டடங்கள் அதிர்ந்து குலுங்கியதாகவும், டோக்கியோவிலும், நில அதிர்வு உணரப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, மியாகி மாகாணத்திற்கு, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடல் அலைகள், 1 மீற்றர் உயரத்திற்கு எழும் என்பதால், கரையோர மக்களுக்கு, பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து பெருமளவு மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற போதும், ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.





