ஜேர்மனியில் முடக்க கட்டுப்பாடுகளை எதிர்த்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் போது, வன்முறை வெடித்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு கலைக்க முயன்றுள்ளனர்.
இருப்பினும் போராட்டக்காரர்கள் சுகாதார நடைமுறைகளை மீறவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும்போது ஜேர்மனியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பின்தங்கிய நிலையிலேயே இருப்பதால், முடக்க கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.