தமிழக சட்டசபையின் 10 ஆவது கூட்டத் தொடர் கடந்த 19ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தொடர் பெப்ரவரி 2ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இதன்போது வரவு செலவுத்திட்ட அறிக்கை உள்ளிட்ட விவாதங்கள் நடைபெற்றிருந்தன.
அதனைத்தொடர்ந்து சில சட்டமூலங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் மாநில ஆளுநர் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக சட்டமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.