தே.மு.தி.க. கட்சியின் தலைவர் விஜய்காந்தின் மைத்துனரும், அக்கட்சியின் துணைச்செயலாளருமான சுதீஷ் தே.மு.தி.க. பிரேமலதா விஜயகாந்தை ஆதரித்து விருத்தாசலத்தில் தீவிர பிரசாரத்தில் சுதீஷ் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுதீஷ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அம்மருத்துவமனை வைத்தியர்கள் கேட்டுக்கொண்டனர்.





