அவுஸ்ரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் வெள்ள அபாயம் அதிகரித்து வருவதை அடுத்து, மேலும் பல பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிட்னி நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள அனைவரும் வெளியேற வேண்டும் என்ற அதிகாரிகள் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
மாகாணத்தின் சில பகுதியில் 100 ஆண்டுகளில் முதல் முறையாக இத்தகைய வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நியூ சவுத்வேல்ஸ் முதல்வர் தெரிவித்துள்ளார்.
சிட்னியின் பிரதான நீர் ஆதாரமான Warragamba அணைக்கட்டு அண்மைக்காலத்தில் முதல் முறையாக நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வீதிகள் பெரும்பாலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளதாகவும் மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.