திருகோணமலை – தம்பலகாமம் – பத்தினிபுரம் பகுதியில் குடிசையொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நல்லூர் – மூதூர் பகுதியை சேர்ந்த 46 வயதான பெண்ணொருவரே இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்