ஒருதலைக் காதல் தகராறில் 8 மாத கைக்குழந்தையை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மகிழுந்து சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த மதபோதகர் மற்றும் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
நெல்லை மாவட்டம் மகிழடியில் வசிக்கும் கிறிஸ்தவ மத போதகர் ரசூல்ராஜ், எப்சிபாய் தம்பதியினரின் இளைய மகள் ஏஞ்சல் பிளக்சி கோவையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தாதியாகவும் பணியாற்றி வருகிறார்
இந்நிலையில் பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த வாடகை மகிழுந்து சாரதியான ராமசாமி சிவசங்கரன் ஏஞ்சல் பிளக்சியை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு சிவசங்கரன், ரசூல்ராஜிடம் சென்று இளைய மகள் ஏஞ்சல் பிளக்சியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி பெண் கேட்டுள்ளார்.
இதற்கு ரசூல்ராஜ் மறுப்பு தெரிவிக்கவும் அவர் மீது சிவசங்கரன் ஆத்திரமடைந்து அரிவாள், மற்றும் பெற்றோல் கலனுடன் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரை கொலை செய்ய முனைந்துள்ளார்.
இதன்போது நடைபெற்ற தகராரில் ரசூல்ராஜ் ஜின் மகளுடைய எட்டு மாதக் குழந்தை வாள்வெட்டுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்ததோடு ரசூல்ராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகினர்
பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்ற சிவசங்கரனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.