கொரோனா தொற்று தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளதை அடுத்து தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த வகுப்புகளுக்கு இணையவழி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எனினும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாடசாலைகள் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், தொற்றால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.