தோல்வி பயத்தினால் அ.ம.முக.,வினர் தன்னை கொல்ல முயற்சிக்கின்றனர் என அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார்.
கோவில்பட்டியல் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“நேற்றிரவு அதிமுக, அமமுக இருதரப்பிலும் ஒரே இடத்தில் பிரசாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தபோது, எனது பிரசாரத்தை ரத்து செய்து விட்டு, தனியாக மகிழுந்தில் சென்ற போது, அமமுக.,வினர் வழிமறித்து, வெடியை கொளுத்தி, வீசி எறிந்தனர்.
இதனால், வாகனம் தீப்பற்றி எரியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டதுடன், சாரதி மீதும், என் மீதும் தீப்பொறி விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதைக்கண்டு நான் அஞ்சப் போவதில்லை.
என்னுடைய வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால், தேர்தல் பணியை தடுப்பதற்காக கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.