இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களும் பெற்றோரும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதை அடுத்து, இத்தாலியில் பாடசாலைகள் அனைத்து மூடப்பட்டுள்ளன.
வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, மாணவர்கள் வீட்டிலிருந்து இணைய வழியில் நடத்தப்படும் பாடங்களில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாடசாலைகள் மூடப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கானமாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்றுகளைத் தடுக்க முயற்சிப்பதற்காக பாடசாலைகளை தேவையற்ற முறையில் மூடுவதாக போராட்டம் நடதியவர்கள் தெரிவித்தனர்.