இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் நான்காவது முறையாக மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
இஸ்ரேலில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் ( Benjamin Netanyahu) லிக்குட் (Likud) கட்சி வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் அதே ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2-வது முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.
அந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எதிர்க்கட்சியுடன் சேர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனால், 3-வது முறையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றது.
அந்த தேர்தலிலும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னர், ஒற்றுமை அரசு நிறுவப்பட்டு பெஞ்சமின் நேதன்யாகு பிரதமராக பதவி ஏற்றார்.
கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவரது அரசாங்கம் கவிழ்ந்ததை அடுத்து, அங்கு மீண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.