ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா இறுதி முயற்சிகளில் இறங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய, 57 அரபு நாடுகளின் கூட்டணியான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருடன் தொலைபேசி மூலமாக உரையாடியுள்ளார்.
‘இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருக்கு சிறிலங்கா ஜனாதிபதியிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று கிடைத்ததாகவும், இரு தரப்பு உறவுகள் மற்றும் சிறிலங்கா முஸ்லிம்களின் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும்’ அந்த அமைப்பு கீச்சகப் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் மகிந்த பஹ்ரைனின் பிரதி மன்னர் சல்மான் பின் ஹமாதுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.