ஒன்ராரியோவில் உள்ள வைத்தியசாலைகள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தினை வினைத்திறனாக முன்னெடுப்பதற்காக மாகாண அரசாங்கம் 1.5பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் டக் போர்ட் (DOUG FORD) அறிவித்துள்ளார்.
ஸ்காபரோவில் இன்று ஊடவியலாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்த ஊடவியலாளர் சந்திப்பில் முதல்வர் போர்ட்டுடன் மாகாண நிதி அமைச்சரும், திறைசேரியின் தலைவருமான பீட்டர் பெத்லென்ஃபால்வியும் (Peter Bethlenfalvy) உடன் இருந்தார்.
ஒன்ராரியோவில் உள்ள வைத்தியசாலைகள் எவ்விதமான தயக்கங்களும் இன்றி கடந்த காலத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் செயற்பட்டிருந்தன.
இந்தநிலைமை மேலும் வலுவானதாக மாற்றப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் முதல்வர் போர்ட் மேலும் தெரிவித்தார்.