ஓஷாவா ஒலிவ் அவனியுவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ காரணமாக இதுவரையில் இருவர் மரணமாகியுள்ளதோடு இருவர் காண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஒருமணியளவில் தீயணைப்பு பிரிவினருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பினை அடுத்து அவர்கள் ஒலிவ் அவனியுவிற்கு வருகை தந்தனர்.
அதன்போது, வீடொன்றில் தீச்சுவாலைகள் காணப்பட்டதை அவதானித்து அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும் வீட்டில் இருந்த ஐவரில் மூவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டினுள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் ஏனைய இருவர் தற்போது வரையில் கண்டறியப்படவில்லை.