அவுஸ்ரேலியாவின் சிட்னி வானுர்தி நிலையத்தின் ஓடுதளத்தில் வெள்ளம் புகுந்ததால், வானுர்தி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், 1961ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த சில நாட்களில் 100 சென்டி மீற்றர்மழை பெய்துள்ளதால், சிட்னி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்வதாகவும், பல இடங்களில் ஆற்று வெள்ளம் கரையை தாண்டி ஊருக்குள் புகுந்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
சிட்னி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு மோசமாக உள்ளதாகவும், சிட்னி வானுர்தி ஓடுதளத்தில் வெள்ளம் புகுந்ததால், வானுர்தி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாகாணத்திலும் வெள்ள நிலைமை மோசமாக இருப்பதுடன், பிரிஸ்பேன் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக 18 ஆயிரம் பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.