ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்குமாறு பஹ்ரெய்னின் துணை மன்னரும், பிரதமருமான சல்மான் பின் ஹமாட் அல் கலீபாவிடம், சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஹ்ரெய்னின் துணை மன்னரும், பிரதமருமான சல்மான் பின் ஹமாட் அல் கலீபாவுக்கு, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கலந்துரையாடியுள்ளார்.
ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு கோருவதற்காகவே சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச பஹ்ரெய்ன் பிரதமருடன் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 47 உறுப்பு நாடுகளில் பஹ்ரெய்னும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.