தான் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) கொரோனா தடுப்பூசியை பகிரங்கமாக ஏற்றிக்கொள்ளவுள்ளதாக ஒன்ராரியோவின் துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான கிறிஸ்டின் எலியட் (Christine Elliott) தெரிவித்துள்ளார்.
இந்தச் செயற்பாடு மெய்நிகர் வழியிலும், ஒளிபரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாக இந்த விளிப்புணர்வுச் செயற்பாட்டை தான் முன்னெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசி மீதான அச்சமும் பொதுமக்களுக்கு அகன்றுவிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.