இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரித்தானிய பிரதமர் போறிஸ் ஜோன்சன், தனுஷ்கோடியில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போறிஸ் ஜோன்சன் கடந்த ஜனவரி மாதம்,இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த போதும், கொரோனா தொற்றினால் பயணத்தை ரத்துச் செய்திருந்தார்.
இந்தநிலையில் ஏப்ரல் கடைசி வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பிரித்தானிய பிரதமரை, ஏப்ரல் 26ம் நாள் தனுஷ்கோடிக்கு அழைத்துச் செல்ல இந்தியப் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
இதற்காக பிரித்தானிய புலனாய்வு அதிகாரிகள் மதுரை, தனுஷ்கோடியில் களஆய்வுகளை செய்துள்ளனர்.
எனினும், ஏப்ரல் 26ஆம் திகதிக்குள் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே அவரது தனுஷ்கோடி பயணம் உறுதிசெய்யப்படும் என பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.