தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் கல்லூரிகள், மூடப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இறுதியாண்டு மாணவர்களுக்கும், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏனைய மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து, கல்லூரிகளில் நடந்து வந்த நேரடி வகுப்புகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, வாரத்திற்கு 6 நாட்கள் இணையவழி வகுப்புகளை நடத்தலாம் என்று அறிவித்துள்ளது