தமிழக சட்டசபை தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
“கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.
கொரோனா பாதித்த வேட்பாளர்கள், கவச உடையுடன் வாக்களிக்கலாம்.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே தேர்தலை பிற்போடும் முடிவுகள் ஏதும் எடுக்கப்படாது, திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.