ஒன்ராரியோவின் பீல் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான முற்பதிவுகளை ஆறு மருந்தகங்கள் ஏற்றுக்கொண்டு வருகின்றன.
வில்லியம் ஒஸ்லரின் சிங்குவா கவுஸி வெல்னஸ் சென்டர், பிராம்ப்டன் சிவிக் மருத்துவமனை, ட்ரில்லியம் ஹெல்த் பார்ட்னர்ஸ் மிசிசாகா மருத்துவமனை, ரொரண்டோ பல்கலைக்கழகம், மிசிசாகா (யுடிஎம்) தளங்களில் அமைந்துள்ள மருந்தகங்கள் சனிக்கிழமை முதல் முன்பதிவுகளை ஏற்று வருகின்றன.
பீல் பிராந்தியத்தில் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசி மருந்தகங்களில் தடுப்பூசியைப் பெறுவதற்கான முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இணைவழி மூலமாக முற்பதிவுகளைச் செய்ய முடியாதவர்கள் வாரத்தின் எழு நாட்களும் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரையில் தொலைபேசி அழைப்பின் ஊடாகவும் பதிவுகளைச் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.