மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இந்தியவைத் தளமாகக் கொண்டு இயங்கும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு தளங்களை உருவாக்குவதற்கான அடிப்படை தொழிநுட்பம் இந்தியாவிடம் உள்ளது. இருப்பினும் அதனை உலக சந்தையில் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டோம்.
சர்வதேச விலையுடன் ஒப்பிடும்போது செயற்கைக்கோள் ஏவும் சேவைகளை வழங்குவதற்கான கட்டணம் குறைவாகவே உள்ளது.
மீள் பயன்பாட்டிற்கான ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தியா விண்வெளித்துறையில் புரட்சியை ஏற்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார்