தமிழக சட்டசபைக்கான வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் முற்றுகையிட தொடங்கி உள்ளனர். இதனால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் தரப்பினர் தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.
குறிப்பாக, அரசியல் கட்சித்தலைவர்களிடத்தில் இந்தக் கோரிக்கையை சுகாதாரத்தரப்பு பகிரங்கமாக விடுத்துள்ளது.
எனினும், தற்போதைய நிலையில் அனைத்து தெரிவத்தாட்சி அலுவலங்களும் கட்டுக்கடங்காத வகையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ளனர்.