பிராட்போர்ட் பகுதியில் நேற்று பிற்பகல் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு பிரிவினரால் மீட்கப்பட்ட நால்வரின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
சிம்கோ வீதியில் (Simcoe Road) நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு பிரிவினால், மாடங்களில் உதவி கோரிய நிலையில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் ஐந்தாவது தளத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டதாகவும் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.