தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு டெமாக்ரசி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தின.
இதன்படி அ.தி.மு.க. கூட்டணி 122 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 111 இடங்களிலும், ஏனைய கூட்டணி ஓரிடத்திலும் வெல்லும் என தெரிவித்திருக்கிறது.
பயிர் கடன் தள்ளுபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2,500 உள்ளிட்ட பல மக்கள் நலத்திட்டங்கள், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நிலையான ஆட்சி ஆகிய சாதகமான அம்சங்களால் அதிமுக கூட்டணிக்கு 122 இடங்கள் கிடைக்கக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது.