தென்மேற்கு இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், 20 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், இந்த வன்முறையின் போது பொலிஸாரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு காவல்துறை நிலையமும் தாக்குதலுக்குள்ளானது.
பிரித்தானியாவில் போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பிரிஸ்டோலில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்
இதன்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் போத்தல்களை காவல்துறையினர் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனிடையே காவல்துறையினர் மீதான இந்தத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என உள்துறை அமைச்சர் பிரீதி படேல் கண்டனம் தெரிவித்துள்ளார்