ஒன்ராரியோவில் இரண்டாவது கட்ட கொவிட் தடுப்பூசி திட்டத்தில், உணவகப் பணியாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட இரண்டாவது கட்ட கொவிட் தடுப்பூசி திட்டத்தில், உணவகப் பணியாளர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில், அவர்கள் தம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையிலே உணவகப் பணியாளர்கள் இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் திட்டத்தில் உள்ளீர்க்கப்படுவார்கள் என்று ஒன்ராரியோ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.