ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் அமெரிக்கா உள்ளிட்ட 41 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன.
சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், பிரித்தானியாவினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மான வரைவில், ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா, மலாவி என மொத்தம் ஆறு நாடுகள் அனுசரணை வழங்கியிருந்தன.
பேரவையின் உறுப்பினரால்லாத ஏனைய நாடுகளாலும் இணை அனுசரணை வழங்க முடியும் என்ற நிலையில், மேலும் 35 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளன.
அல்பேனியா, அவுஸ்ரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக்கியா, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து. பிரான்ஸ், கிறீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லிச்ரென்ஸ்ரெய்ன், லிதுவேனியா, லக்சம்பேர்க், மால்டா, மார்ஷல் தீவுகள், நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, போலந்து, போர்ச்சுக்கல், ருமேனியா, சான்மரினோ, ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவிற்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய 35 நாடுகளே இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.