காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி அலைந்து கொண்டிருந்த தந்தை ஒருவர் வவுனியாவில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா- விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய, கனகையா றஞ்சனாமூர்த்தி என்ற தந்தையே சுகவீனம் காரணமாக நேற்று முன்தினம் சாவடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவரது மகன் செல்வநாதன், கடந்த 2007 ஆம் ஆண்டு தந்தைக்கு உணவு கொண்டு செல்லும் போது வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தேடி வந்த தந்தை, வவுனியாவில் கடந்த 1495 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் பங்கேற்று, தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கோரிவந்தார்.
இந்த நிலையில் மகனை கண்டுபிடிக்க முடியாத ஏக்கத்தியே அவர் சாவைத் தழுவியுள்ளார்.