யோர்க் பிராந்தியத்தில் வோகன் (Vaughan) பகுதியில், மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
Teston மற்றும் Kirby வீதிகளுக்கு இடையில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மூவர் காயமடைந்திருந்தனர் என்றும் அவர்களில் ஒரு பெண் உயிரிழந்து விட்டார் என்றும் மருத்துவ உதவிப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்று இன்னமும் தெளிவாகவில்லை என்றும் யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.