வடக்கு மாகாணத்தில் மேலும் நான்கு கொரானா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 294 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட் ட போதே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட கொக்குவிலைச் சேர்ந்த 83 வயது பெண் ஒருவருக்கும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், ஏற்கனவே தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் நேரடித் தொடர்புடைய, 32 வயதுடைய பெண் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் நேரடித் தொடர்புடைய, ஒருவருக்கும், மன்னார் பொது மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த மன்னார் நகரைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.